


Saturday, December 24, 2011இலங்கை::புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தரைப்படை , கடற் படை விமானப்படை மற்றும் பொலீஸ் வீரர்களின் குடும்த்தினருக்கு “உத்தம பூஜா” பதக்கம் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு நுவரெலியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சினாலும் இராணுவ சேவை அதிகாரத்தாளும் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷவின் உதவியுடன் காலை இடம்பெற்றது.
நாட்டிற்காக உயிரைத்தியாகம் செய்த படைவீரர்களுக்காக அரசாங்கத்தினால் பல நலன்புரித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே மிகக் கொடூரமான புலி பயங்கரவாதிகளை நாட்டில் இருந்து முற்றாக அகற்றிய பெருமை, படைவீர்ர்களையே சாரும்.இவர்களை கௌரவிக்கும் வகையிலே இவ்வாறு பதக்கமளிக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய இந் நிகழ்வில் 1400 படைவீர்ர்களின் குடும்பத்தினர் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுள் 1322 தரைப்படை வீரர்களின் குடும்பத்தினரும், 36 கடற் படை வீரர்களின் குடும்பத்தினரும், 16 விமானப்படை வீரர்களின் குடும்பத்தினரும் மற்றும் 30 பொலீஸ் வீரர்களின் குடும்பத்தினரும் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் ரனவிரு சேவா சங்கத்தின் தலைவி திருமதி.பத்மா வாத்தாவ, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாலித பெனான்டோ,நுவரெலிய பிரதேச செயலாளர்,தெற்குப் பாதுகாப்புப் படைக் கட்டலைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். மானவடு ஆகியோர் கலந்துக்கொண்டனர்
No comments:
Post a Comment