Saturday, December 24, 2011நாகை: வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி இன்று நள்ளிரவு நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு பேராலயத்தில் திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.
இதையொட்டி வேளாங்கண்ணி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நேற்று முதலே அவர்கள் வேளாங்கண்ணிக்கு வரத்தொடங்கினர். இதனால் வேளாங்கண்ணி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது. பேராலய கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த பேராலய ஊழியர்கள் இரவு நேரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியை கண்காணித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment