Thursday, December 29, 2011

குழந்தைகள் பாராளுமன்றத்தின் தீர்மானங்களை அங்கீகரிக்க சட்டம் இயற்ற வேண்டும் : முன்னாள் நீதிபதி!

Thursday,December 29, 2011
சென்னை::குழந்தைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில குழந்தைகள் பாராளுமன்ற நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. இதில், முன்னாள் நீதிபதி கனகராஜ் முன்னிலையில், பிரதமர், துணை பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர், சுகாதார துறை அமைச்சர், கல்வித் துறை அமைச்சர் உள்பட பல்வேறு துறை அமைச்சர்களாக குழந்தைகள் பொறுப்பேற்றுக் கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன், குழந்தைகள் பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்.
நீதிபதி கனகராஜ் பேசுகையில், குழந்தைகள் இந்த பாராளுமன்றத்தின் மூலம் பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வருகின்றனர். மேலும் அவர்களின் பொறுப்புகளை தெளிவாக தெரிந்து கொண்டு குழந்தைகள் நலனுக்காகவும், பொது நலனுக்கும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் கருத்துகளை நிறைவேற்றும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். குழந்தைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாராளுமன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ரத்தினம் உள்பட 500க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment