Thursday,December 29, 2011இலங்கை::ஹம்பாந்தோட்டை மாவட்டம் போன்று கிளிநொச்சி மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் அதற்காக நாம் எமது முழுமையான பங்களிப்பினை செலுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று (28) கிளிநொச்சியில் நூற்றி என்பத்தேழு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்ட்ட வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ், வடமாகாண ஆளுநர், மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மக்களின் பாவனைக்காக வீதிகளை திறந்து வைத்தனர்.
அந்த வகையில் கனகபுரம் பண்ணை வீதி, நாகேந்திரபுரம் கடற்கரை வீதி, சுண்டிக்குளம் கடற்கரை வீதி, பளையில் கொற்றாண்டர்குளம் கோவில் வீதி, முகாவில் கிருஸ்ணர் கோவில் வீதி, தருமக்கேணி பூதவராயன் வீதி, முள்ளியடி வீதி ஆகியன இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment