Monday,December,26,2011இலங்கை::கைதிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார். இதன் அடிப்படையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
குற்றச் செயல்களின் காரணமாக ஆயுள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உள்ளிட்ட விசேட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
வெலிக்கடைச் சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகளினால் உருவாக்கப்பட்ட உலகின் மிக நீண்ட வாழ்த்து அட்டை அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி, பொது மன்னிப்பு வழங்குவது குறித்து தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பு மூலம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் விடுதலை செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்தநிலையில் கைதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
2002ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் விசேட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தைக் கொண்டு எவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.
எவ்வாறெனினும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment