Monday,December,26,2011ராமநாதபுரம்:இலங்கைக்கு ஹெராயின் கடத்த முயன்ற சந்தேகநபர் ஒருவரை ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் வைத்து தமிழக கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் என்கிற புஷ்பா தன்ராஜ் இலங்கைக்கு 1.5 கிலோ ஹெராயினை கடத்த முயன்றபோது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் மதிப்பு இந்திய ரூ 1.5 கோடி என கணிப்பிடப்பட்டுள்ளது.
தன்ராஜ் மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தியதாக பல்வேறு வழக்குகள் உள்ளதாக தமிழக பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment