Monday,December,26,2011புதுடெல்லி:கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்ததிற்கு பின்னர் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட இந்த ஆணைகுழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா முதல் தடவையாக கருத்து வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சுயாதீனதான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.
அதுவும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, இலங்கையில் இடம்பெற்ற மோதல்களுக்கு அடிப்படையக இருந்த காரணங்களை அரசாங்கம் உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஒருமித்த கருத்துடன் கூடிய நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள் பாராட்டியுள்ளது.
No comments:
Post a Comment