Friday, December 30, 2011

மெரீனா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை!:-



Friday, December,30, 2011
சென்னை: தானே புயல் காரணமாக பலத்த காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த சில தினங்களாகவே சென்னையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. தானே புயல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரை தண்ணீரில் சூழ்ந்துள்ளது. நேற்று காற்றின் வேகமும், கடல் அலையின் உயரமும் மிக அதிகமாக இருந்தது. தானே புயல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரை தண்ணீரில் சூழ்ந்துள்ளது. இதனால் படகுகள் சாலையில் தூக்கி எறியப்பட்டுள்ளன.

இதனால் மெரீனா கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைக்கு போகும் வழியில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. நேற்று இரவு கடல் சீற்றம் அதிகமானதால் மெரீனா கடற்கரை முழுவதும் வெள்ளம் புகுந்தது. சர்வீஸ் ரோடு வரை கடல் நீர் வந்தது.

எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முன் பகுதி வரை கடல்நீர் புகுந்ததால், மெரீனா கடற்கரை நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டிகள், நடைபாதை கடைகள் கடல் நீரில் மூழ்கின. கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமரங்கள் சர்வீஸ் ரோடு வரை இழுத்து வரப்பட்டன. மீனவர்களின் வலைகளும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தன. கடற்கரைக்கு செல்ல பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இன்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மெரினா சாலை மூடல்!

சென்னையில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதால் சென்னை மெரினா கடற்கரையில் மணல் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. கடல் சீற்றத்தால், சுமார் அரை கி.மீட்டருக்கு தண்ணீர் புகுந்துள்ளதால், கடற்கரைச் சாலை, காமராஜர் சாலையில் காலை முதலே போலீஸார் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி சாலையை மூடினர்.

தானே' புயலுக்கு தமிழகத்தில் 5 பேர் பலி!

புதுச்சேரி: பொது மக்களிடையே பீதியை கிளப்பி வரும் தானே புயலானது புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதோடு, 5பேரின் உயிரையும் பறித்து விட்டது. விழுப்புரம் மாவட்டம் கோடக்குப்பம் பகுதியில் இன்று அதிகாலை தானே புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் கோட்டக்குப்பத்தில் மிக பெரிய மரம் வேரோடு சரிந்து பிரகாஷ் என்பவர் வீடுமீது விழுந்தது. இதில் அந்த வீடு நொறுங்கிதோடு இடிபாடுகளில் சிக்கி பிரகாஷின் மனைவி சுகந்தி வீட்டுக்குள்ளேயே உயிரிழந்தார்.

அதேபோல், சங்கராபுரம் ஆலந்தூரில் ஒரு முதியவர் இன்று அதிகாலை தெருவில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், புதுச்சேரியில் வீடு இடிந்து, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவர் உயிரிழந்தார். பலருக்கு காயம் ஏற்பட்டது. வானூரில் வீடு இடிந்து ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர். ஆவடி பட்டாபிராமில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (67) மின்சாரம் தாக்கி இறந்தார்.

No comments:

Post a Comment