Friday, December,30, 2011இலங்கை::கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சடலத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பதினோரு பேர் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ம் திகதி இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்ட சடலத்துடன் கட்டுநாயக்காவில் இருந்து ஆறு சிறார்கள் உட்பட பதினோரு பேர் யாழ்ப்பாணம் நோக்கி வந்தவேளையில் மாங்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் காணாமல் போனதாக பேரின்பராசா நளாயினி என்பவர் யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம் மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட தவபாலன் தனஞ்செயன் என்பவர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் இத்தகைய சம்பவம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறிப்பிட்ட ஒரு சம்பவம் நடைபெறவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய முறைப்பாடு செய்யப்பட்டதற்கான உரிய காரணம் இதுவரை தெரியவரவில்லை.
No comments:
Post a Comment