Tuesday, December,27, 2011இலங்கை::கட்சிப் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கிளர்ச்சியாளர்களுக்கு ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சிப் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று தமது பலத்தை நிரூபிக்குமாறு, கிளர்ச்சியாளர்களுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி ஹம்பாந்தோட்டை திஸ்ஸ மஹாராம தெபரவௌ மைதானத்தில் ஜே.வி.பி.யின் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் பெரும்பான்மை பலம் தமக்குக் காணப்படுவதாக கிளர்ச்சியாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் எனவும், இதனை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு முடிந்தால் தமது பெரும்பான்மை பலத்தை கிளர்ச்சியாளர்கள் நிரூபிக்க முடியம் என அவர் சவால் விடுத்துள்ளார்.
கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த சகலருக்கும் அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உரிய முறையில் கிளர்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுவதுடன், உரிய முறையில் அழைப்பும் விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கிளர்ச்சிக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment