Monday, December 12, 2011

இந்தியாவிற்கு விஜயம் செய்கின்ற அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இலங்கை குறித்த விவகாரங்களை கையாளும்-வில்லியம் பேர்ன்ஸ்!

Monday, December 12, 2011
இந்தியாவிற்கு விஜயம் செய்கின்ற அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இலங்கை குறித்த விவகாரங்களை கையாளும், அமெரிக்க உதவி இராஜாங்கத் செயலாளர் வில்லியம் பேர்ன்ஸ் புதுடில்லியில் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.இவ்விஜயத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பின்னரான அரசியல் நிலைமைகள் மற்றும் துணைக் கண்டத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்த வில்லியம் பேர்ன்ஸ் புதுடில்லியில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இவ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

புதுடில்லிக்கு நேற்று சென்ற இவர் நாளை 13-ம் திகதி வரை அங்கு தங்கியிருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மத்தாய் ஆகியோருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை விவகாரம் தொடர்பாக வில்லியம் பேர்ன்ஸ் புதுடில்லியில் கலந்துரையாடுவாரா என்பதை உறுதிப்படுத்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனிடையில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய தரப்புடன் விரிவாக ஆராயவுள்ள இவர், இதன்போது இலங்கையின் அரசியல் போக்குகள் குறித்தும் ஆராய்வர் என கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

No comments:

Post a Comment