Thursday,December 29, 2011இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகா மற்றும் சிவில் அமைப்புச் செயற்பாட்டாளர்கள் சிலர் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விடயம் குறித்து ரணில் விக்ரமசிங்க, கட்சியில் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன் ஓர் கட்டமாக, ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜந்த கெட்டகொடவிற்கு கடுவவல தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய முகங்களை அறிமுகப்படுத்த ரணில் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment