Thursday,December 29, 2011இலங்கை::முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளா மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மற்றும் கரையோரப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி குறித்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடாத்தும் நோக்கில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
மீள்குடியேற்ற மற்றும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் தேர்தல்கள் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரதேச சபைகளைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இன்னமும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள பருவப் பெயர்ச்சி காலநிலையும் தேர்தல் ஒத்தி வைப்பதற்கான ஏதுவாக அமைந்துள்ளது என தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் காரணமாக வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்களை பதியாதவர்களை, பட்டியலில் உள்ளடக்க புதிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment