Thursday, December 29, 2011

90 கி.மீ. சென்று தாக்கும் ராக்கெட் ரஷ்யாவிடம் இந்தியா வாங்குகிறது!

Thursday,December 29, 2011
ஆவடி : ஆவடி டேங்க் பேக்டரி தொழிற்சாலைக்கு 1961ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 1965ல் உற்பத்தி தொடங்கியது. இதன் பொன் விழா, தொழிற்சாலை வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. பொது மேலாளர் எம்.எஸ்.என்.ராவ் வரவேற் றார். படைக்கலன் தொழிலக வாரியத்தின் பொது இயக்குனரும் தலைவருமான எஸ்.டி. திம்ரி தலைமை விருந்தினராக பங்கேற்று, பொன் விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவடி டேங்க் பேக்டரியில் மட்டும் ஸி2600 கோடிக்கு டேங்கிகள் தயாரிக்கப்படுகிறது.

பீரங்கியை தாக்கும் ஏவுகணைகளை ரேடார் மூலம் கண்டறிந்து அவற்றை பீரங்கி மூலமாகவே அழிக்கும் புதிய தொழில்நுட்பம் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
ஸ்மஜ் என்ற ராக்கெட்டை ரஷ்யாவிடமிருந்து வாங்க உள்ளோம். இந்த ராக்கெட் 90 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்லது. 40 கி.மீ. சென்று தாக்கக்கூடிய பினாங்கோ என்ற ராக்கெட் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

30 டன் எடை குறைவான பீரங்கிகளை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். சுவீடன் நாட்டிலிருந்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட் மற்றும் லாஞ்சர்கள் வாங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். விழாவில் படைக்கலன் தொழிலக வாரியத்தின் துணை தலைவர் எம்.சி.பன்சால், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment