Monday, December 26, 2011

சென்னை பல்கலைகழகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உரை:-கறுப்புக்கொடி போராட்ட அறிவிப்பால் காரைக்குடியில் பிரதமருக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு!

Monday,December, 26,2011
சென்னை : கணித மேதை ராமானுஜம் அவர்களின் 125 வது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் கணித மேதை ராமானுஜம் எழுதிய நூல்களின் புதிய பதிப்பை வெளியிட்டார். மேலும் ராமானுஜம் உருவம் பொதித்த அஞ்சல் உறையையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டார். அப்போது 2012ஆம் ஆணை கணித ஆண்டாக பிரதமர் முறைப்படி அறிவித்தார். ராமானுஜம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர், மத்திய மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் கபில்சிபல், ஜி.கே.வாசன், ஜெயந்தி, நாராயணசாமி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். கணித மேதை ராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய
பேராசிரியர் ராபர்ட் கானிகல் விழாவில் கௌரவிக்கப்பட்டார். கணித மேதை ராமானுஜம் அவர்களின் புலமையை பாராட்டி பேசிய பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 22ம் தேதியை தேசிய கணித நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் கணிதத்துறையில் உலகிற்கு
இந்தியாவின் பங்களிப்பு போற்றத்தக்கது என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

கறுப்புக்கொடி போராட்ட அறிவிப்பால் காரைக்குடியில் பிரதமருக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு!

காரைக்குடி : கறுப்பு கொடி காட்டப்போவதாக கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவித்துள்ளதால், காரைக்குடிக்கு வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் முல்லைப்பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணு உலை பிரச்னை போன்றவற்றால் போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன.இப்பிரச்னைகளில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டி, பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனால், காரைக்குடி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் மன்மோகன்சிங் வந்து இறங்குகிறார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ராமானுஜம் கணித உயர்கல்வி மைய கட்டிட திறப்பு விழா மற்றும் காரைக்குடி மானகிரியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாக்களில் பங்கேற்கிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடியில் இருந்து மானகிரி செல்லும் ஐந்தரை கிலோமீட்டர் தூரமும் மரத்தாலான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே செக்போஸ்ட்கள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்தி ரோந்து சுற்றி வருகின்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு ‘இன்னர் கார்டன், சென்டர் கார்டன், அவுட்டர் கார் டன்‘ உட்பட ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய மண்டல ஐஜி சொர்ணலிங்கம், மதுரை கமிஷனர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். மானகிரியிலும் ஒரு ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் பாதை முழுவதும் உள்ள கட்டிடங்களின் மேல் தளங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment