




Monday,December, 26,2011இலங்கை:சுனாமி தாக்கத்தினை மையப் படுத்தி வருடாவருடம் அனுஸ்ட்டிக்கப்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் மட்டக்களப்பு காத்தான்குடியில் மிகவும் உணர்வு பூர்வமாக இன்று (26.12.2011) காலை 09 மணிக்கு அனுஸ்ட்டிக்கப்பட்டது.
இலங்கையின் நாலா பக்கமும் இருந்து வந்த மேள தாள வாத்தியக் குழுக்கள் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் முப்படைகளினரது பாண் வாத்தியங்கள் அரச, அரச சார்பற்ற அமைப்புக்களினதும் சுனாமி அனர்த்தத்தைப் பிரதி பலிக்கக் கூடிய வாகன ஊர்திகள் முப்படைகளினது அணிவகுப்புக்கள் என்பன மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. ..
இடர் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இவ்வைபவம் நடைபெற்றது.
பிரதமர் தி.மு. ஜயரத்ன, இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமசிங்க பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பசீர் ஷேகுதாவூத், விநாயக மூர்த்தி முரளிதரன், டுலிப் விஜேசேகர பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேசேகர இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி முகம்மட் அதன் பணிப்பாளர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அதன் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதம மந்திரி தேசியக் கொடியையும், கிழக்கு மாகாண கொடியினை கிழக்கு மாகாண முதலமைச்சரும், அனர்த்த முகாமைத்துவ கொடியினை இடர் முகாமைத்தவ அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட கொடியினை பிரதயிமைச்சர் ஹிஸ்புல்லாவும் ஏற்றி வைத்தனர்.
இதனையடுத்து சுனாமி மற்றும் அனர்த்தங்களின் போது உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி நடைபெற்றது.
இதையடுத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் பாடசாலை மாணவர்களின் அணி நடை கலை கலாசார நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.
ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்திற்கு முன்னாலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளையடுத்து ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இதையொட்டிய வைபவம் நடைபெற்றது.
No comments:
Post a Comment