Saturday, December 24, 2011

நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற கணவன் மனைவி இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

Saturday, December 24, 2011
இலங்கை::நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற கணவன் மனைவி இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரினால் பலத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதியின் முன்னர் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலை 24ம் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்து நின்ற வேளையில் காணிப் பிணக்கைத் தொடர்ந்து சந்தேகநபரான அருணாசலம் குணேஸ்வரன் என்பவர் தனது சகோதிரியையும் கணவரையும் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு சென்று வரும் வேளையில் மறைந்திருந்து வெட்டிக் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவான சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரினால் தொடர்ந்து தேடுப்பட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment