Saturday, December 24, 2011

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துச் செல்வதா அல்லது பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்வதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்க உள்ளது!

Saturday, December 24, 2011
இலங்கை:அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துச் செல்வதா அல்லது பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்வதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்க உள்ளது.

இதுகுறித்து விரைவில் கூடி ஆராய போவதாக கூட்ட மைப்பின் பேச்சாளரும் யாழ். மா வட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்ந்திரன் தெரிவித்துள்ளார்.

பேச்வார்த்தை விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்ர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சரவையின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் கருத்துக்களிலிருந்து பேச்சுவார்த்தையினை தொடர்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. இவ்விடயம் குறித்து நாம் எமக்குள் ஒன்றுகூடி ஆராய்ந்து தீர்க்கமான முடிவினை எடுப்போம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

தீர்வு முயற்சியில் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகள் போன்று செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் தீர்வினை கொண்டுவரப்போவதில்லை.

இவை இரண்டு கட்சிகளுக்கிடையில் இடம்பெறும் இரகசிய பேச்சுக்கள் என அமைச்ர் பஷில் ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்திருந்தார். இதேபோல் காவற்துறை, காணி அதிகாரம் குறித்து பேசி கூட்டமைப்பு காலத்தை வீணடிக்கின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருந்தார்.

அரசாங்க தரப்பினரின் இந்த கருத்துக்கள் குறித்து பதிலளிக்கும் போதே (புலி)பிரேமச்சந்திரன் மேற்கண்டாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்க தரப்பினரின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எம்மை வெளியேற்றும் நோக்கம் கொண்டவையாகவே அமைந்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ பகிரங்கமாகவே காவற்துறை, காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்ல, பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் கருத்துக்களும் அதே தோரணையில் அமைந்துள்ளன.

இந்தநிலையில் பேச்வார்த்தையினை தொடர்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. ஜனவரி மாதம் 17ஆம் 18ஆம் 19ஆம் திகதிகளில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு திகதிகளை குறிப்பிட்டிருந்தோம். ஜனாதிபதியின் கருத்துக்கள் வெளியாவதற்கு முன்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையில் பேச்க்களை தொடர வேண்டுமா அல்லது கைவிட வேணடுமா என்பது தொடர்பில் தீர்க்கமான முடி வொன்றினை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நாம் எமக்குள் ஒன்று கூடி ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டியுள்ளது என (புலி)பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment