Saturday, December 24, 2011இலங்கை::மித்தெனிய ஜூலம்பிட்டிய பகுதியில் பொலிஸாருக்கும் ஆயுத குழு ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5.10 அளவில் இந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
ஆயுத குழுவொன்று நடமாடுவதாக மித்தெனிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து ரி56 ரக துப்பாகிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment