Friday, December 9, 2011

மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வழங்குமாறு ஐ.தே.க தெரிவிப்பு!

Friday, December 09, 2011
இலங்கை: மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அளுவிஹாரே பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், தேசிய மொழிகள் மற்றும் சமுக நல்லிணக்கம் ஆகிய அமைச்சுக்குரிய செலவீனங்கள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இன்றைய வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அளுவிஹாரே, சில உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தில் பலவீனங்கள் காணப்படுவதாகக் கூறினார்.

உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களின் கொள்கை மேம்பாடு மற்றும் மக்களின் வசதிகருதிய அலுவலக முறைமை ஆகியன ஏற்படுத்தப்படும் என இந்த விவாதத்தில் கலந்துகொண்ட, பொதுநிர்வாக அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment