Friday, December 09, 2011மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் இருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் வந்த டவுன் பஸ்சில் கடந்த 7ம் தேதி டைம்பாம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை எஸ்பி அஸ்ராகார்க் விசாரணை நடத்தினார். அதே பஸ்சில் பயணியாக வந்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நிஷாந்த்திடம்(27) சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் 2 பேர் சிக்கியுள்ளனர். இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘டைம்பாம் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அப்பகுதியிலிருந்த மொபைல்போன் டவர்களை பயன்படுத்தி பேசப்பட்ட போன் எண்களை ஆய்வு செய்துள்ளோம். இதன் அடிப்படையில் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த உமர்பருக் மற்றும் நெல்பேட்டையைச் சேர்ந்த மற்றொருவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. உமர்பரூக் தீவிரவாதி இமாம் அலி தப்பிய வழக்கில் சிக்கியவர். டைம்பாமை தயாரித்ததில் இவர்களுக்கு பங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது’’ என்றார்.
No comments:
Post a Comment