Monday,December, 26,2011இலங்கை:மரண தண்டனையை நீக்குமாறு கோரி அரசாங்கத்திடம் பரிந்துரைகளை சமர்ப்பிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்படுகின்றமையானது குற்றச்செயல்களை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளில் ஒன்றாக அமையாது என அதன் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டினார்.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பது சிறந்ததாக அமையும் எனவும் அவர் சுடிக்காட்டினார்.
அத்துடன் மரண தண்டனை சட்டத்தை நீக்குகின்றமை தொடர்பில் தாம் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் மனித உரிமைகள் உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment