Saturday, December 10, 2011

இலங்கையில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட சர்வதேசத்தின் உதவி பெறப்படுமாம்-ரணில் விக்கிரமசிங்க!

Saturday, December 10, 2011
இலங்கை::நாட்டில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் சர்வதேசத்தின் ஊடாகவேனும் சட்டத்தை நிலைநாட்ட முற்படுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றிக்காக பாடுபட்ட சரத் பொன்சேகாவுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக 10 லட்சம் பேரின் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று கொழும்பில் ஆரம்பமானது.

இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கையில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்கிம் போதே தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment