Saturday, December 10, 2011இலங்கை::கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் 42 வயதுடைய பெண்ணொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 42 வயதான உளநலம் குன்றிய பெண்ணொருவரை நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் குறித்த பெண் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அயலவரின் உதவியுடன் உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைக் கிளிநொச்சி காவற்துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். அந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர். அந்த இவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment