Wednesday, December 28, 2011

நடிகர்கள் மீது ஈவிகேஎஸ் கடும் தாக்கு!

Wednesday,December,28,2011
சென்னை: காங்கிரஸ் கட்சியின் 127ம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் சத்திய மூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக கேரளாவில் சில தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.

அணை விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இருமாநிலத்தவரும் அமைதி காக்க வேண்டும். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக முதலில் லட்சக்கணக்கானவர்கள் கூடினர். இப்போது, நுற்றுக்கணக்காவர்களே கூடுகின்றனர். அவரை சுற்றியுள்ளவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒரு நடிகரின் திருமண மண்டபத்தில் அவரது ஆதரவாளர்கள் நூறுக்கும் குறைவானவர்களே கூடினர்.

அன்னாவை சுற்றி உள்ளவர்கள் பெரும்பாலானோர் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள். தமிழ்நாட்டில் சில தமிழ் நடிகர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். அவர்களும் கருப்பு பண பட்டியலில் அடங்குவர். அன்னா ஹசாரே ஏமாற்று பேர்வழி என்பது இந்திய மக்களுக்கு தெரிந்து விட்டது. இவ்வாறு இளங்கோவன் கூறினார்...

No comments:

Post a Comment