Wednesday,December,28,2011இந்தோனேசியா::இந்தோனேசியாவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளின் பயணிகளுக்கான வீசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
இதனால், இந்தோனேசியா செல்லும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று இந்தோனேசியாவின் குடிவரவுத் துறை கட்டுப்பாட்டாள் பெங்பாங் இராவன் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தோனேசியாவில் 3 ஆயிரத்து 660 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை அதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் அகதிகள், இந்தோனேசியாவின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சிக்கின்றனர்.
இதற்கு அவர்கள் சட்டவிரோதமான படகுகளை பயன்படுத்துகின்றனர்.
தற்போது வீசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், அகதிகள் இலகுவாக இந்தோனேசியாவிற்குள் நுழைய முடியும் என்று பெங்பாங் இராவன் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment