Tuesday, December 6, 2011

கலிபோர்னியாவில் பரபரப்பு விமான நிலையத்தில் சீக்கியருக்கு கத்திக்குத்து!

uesday, December 06, 2011
வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்தில் சீக்கியரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள பிரஸ்னோ யோஸ்மைட் சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாட்களுக்கு முன் சீக்கியர் ஒருவர் வந்தார். அவருடன் மொழி பெயர்பாளரும் இருந்தார். இந்தியாவுக்கு செல்ல விமான நிலையத்தின் சோதனை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வெள்ளைக்காரர் ஒருவர் திடீரென சீக்கியரை கத்தியால் குத்தி விட்டார். சீக்கியர் அதிர்ச்சி அடைந்து வலியில் துடித்தார். உடனடியாக விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வந்து கத்தியால் குத்தியவரை கைது செய்தனர். சீக்கியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் திட்டமிட்டப்படி விமான பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து பிரஸ்னோ நகர போலீசார் கூறுகையில், ÔÔசீக்கியருக்கும் கத்தியால் குத்திய 26 வயதுடைய வாலிபருக்கும் தொடர்பே இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் இன பாகுபாடு எதுவும் இல்லை. வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்ÕÕ என்றனர். ஆனால், சீக்கியரின் பெயரும், கத்தியால் குத்திய வாலிபரின் பெயரும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment