Tuesday, December 6, 2011

இலங்கையில் 500 நபர்களுக்கு இரட்டை குடியுரிமை!

Tuesday, December 06, 2011
500 நபர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இரட்டை குடியுரிமை வழங்குதல் நிறுத்தப்படுவதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து இந்த 500 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

இந்தத் தீர்மானம் எட்டப்படுவதற்கு முன்னர் சுமார் ஆயிரத்து 10 விண்ணப்பதாரிகள் இரட்டை குடியுரிமையைபட பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த 500 நபர்களின் விண்ணப்பங்கள் விசேட குழுவொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சூலானந்த பெரரா சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment