Tuesday, December 6, 2011

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!

Tuesday, December 06, 2011
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான வழங்குகளை விரைவில் விசாரணைக்குட்படுத்தும் திட்டத்தை மேலும் சில மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க சட்ட மாஅதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது பொலன்நறுவை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் புத்தளம் பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயற்படவுள்ளது.

இதன்கீழ் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் அது தொடர்பாக தகவல்கள் பொலிஸ் நிலையம் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் வழங்கப்பட வேண்டும்.

அவற்றுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு 04 வாராகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்குகளை விரைவில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிபதிகள் இணக்கம் தெரிவிள்ளதாகவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment