Tuesday, December 6, 2011

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடர் குண்டுவெடிப்பு : 30 பேர் பலி!

Tuesday, December 06, 2011
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர்.

முகரம் பண்டிகையொட்டி, காபூலில் உள்ள மசூதியில் இன்று சிறப்புத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நிகழ்ந்தது. அதே நேரத்தில், மஷார் இ ஷெரீப் என்ற இடத்தில், நடந்த முகரம் ஊர்வலத்திலும் குண்டு வெடித்தது.

இந்த தாக்குதல்களில், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலை தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment