Tuesday, December 6, 2011

மோசமான வானிலை சீனாவில் பனிப்பொழிவு 100 விமானங்கள் ரத்து!

Tuesday, December 06, 2011
பீஜிங் : மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக சீன தலைநகர் பீஜிங்கில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று 100க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 207 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தரை இறங்க வேண்டிய விமானங்களும் பல மணி நேரம் தாமதமாகவே தரையிறங்குவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஞாயிறன்று இருந்ததை விட கடுமையான பனி மூட்டம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீஜிங்கில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் தரைவழிப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment