Tuesday, December 6, 2011

இலங்கையில் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்க ஆரம்பம்!

Tuesday, December 06, 2011
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக தபால் நிலையங்களிடம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி சுமனா ஆரியதாச குறிப்பிட்டார்.

நிதி நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் நாட்டிலுள்ள தபால் நிலையங்களுக்கு விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே எவ்வித சிக்கல்களும் இன்றி இந்த ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

No comments:

Post a Comment