Tuesday, December 13, 2011

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி மருந்துகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது!

Tuesday, December 13, 2011
இலங்கை::யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி மருந்துகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை பழைமை வாய்ந்த வீட்டை திருத்தும் முகமாக இடித்த வேளையில் வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்து தொகுதி வேலையாட்களினால் கண்டு பிடிக்கப்பட்டது.

மானிப்பாய் கூழாவடி என்னும் இடத்தில் உள்ள வீட்டில் குழாயில் அடைத்து இந்த வெடி மருந்து வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது சம்பந்தமாக படம் எடுப்பதற்கு யாருக்கும் மானிப்பாய் பொலிஸாரால் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நடவடிக்கையினால் மானிப்பாய் பகுதயில் சற்று நேரம் பெரும் பதட்டமான நிலை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment