Tuesday, December 13, 2011

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம்!

Tuesday, December 13, 2011
இலங்கை::சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக யாழ். தமிழர்களிடம் கையொப்பம் பெறப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் இந் நடவடிக்கையினை முன்னெடுத்து 90 நாட்களுக்குள் மகஜர் ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிடுகையில்,

சரத்பொன்சேகா அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஐ.நா.விடம் நீதி கோரவே பொதுமக்களிடம் இருந்து 10 இலட்சம் கையொப்பம் பெறும் நடவடிக்கையையே ஐ.தே.க ஆரம்பித்துள்ளது" என அவர் மேலும தெரிவித்தார்.

No comments:

Post a Comment