Saturday, December 3, 2011

புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது!

Saturday, December 03, 2011
புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் எந்த வகையிலான பிரச்சாரங்களையோ அல்லது நிகழ்வுகளை நடாத்த அனுதியளிக்கப்பட மாட்டாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பிரச்சாரங்கள், நிகழ்வுகள் மற்றும் வேறு விடயங்களை மேற்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் வேறு நாடுகளிலும் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்து நிறுத்த இராஜதந்திர வழிகளில் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அநுராதபுர சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி சமயோசிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் பாரிய அனர்த்தம் இடம்பெற்றிருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். புலிச் சந்தேக நபர்கள் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் அவ்வாறு நடத்தியிருந்தால் சிங்களக் கைதிகளை அவர்களை தாக்க உத்தேசித்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்களிடமிருந்து 19 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. கையடக்கத் தொலைபேசிகளில் புலிகள் தொடர்பான படங்கள் உள்ளிட்ட விடயங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment