Tuesday, December 6, 2011

இலங்கையர் என்ற கோட்பாட்டில் இந்நாட்டுப் பிரஜைகளை ஒன்றிணைப்பதே ஜனாதிபதியின் அடுத்த இலக்கு-இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்ன!

Tuesday, December 06, 2011
நாம் அனைவரும் இலங்கையர்" என்ற கோட்பாட்டில் இந்நாட்டுப் பிரஜைகளை ஒன்றிணைப்பதே ஜனாதிபதியின் அடுத்த இலக்கு என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாம் அனைவரும் இலங்கையர்" என்ற கோட்பாட்டின்படி அனைவரதும் ஒன்றிணைப்பே தவிர மதங்களையும் இனங்களையும் கலாசாரங்களையும் ஒன்று சேர்ப்பதல்ல. இன்று ஒழுக்க விழுமியங்கள் படிப்படியாக மறைந்து வருகின்றன.

இதன் காரணமாகவே பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் போதைப் பழக்கம் மற்றும் அமைதியின்மை போன்ற செயல்கள் இடம்பெறுகின்றன. இவர்களை நல்வழிப்ப டுத்துவதில் பாடசாலை ஆசிரியர்களுக்குப் பாரிய பொறுப்பு உண்டு.

உலக நாடுகளில் இவ்வாறு பெருந்தொகைப் புத்தகங்களை இலவசமாக வழங்கும் ஒரே நாடு இலங்கை யாகத்தான் இருக்கும்' என்றார்.

37 மில்லியன் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment