Friday, December 02, 2011அரசாங்கத்துடன் இடம்பெறும் கலந்துரையாடல்களில், அரசியல் தீர்வு தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டால், பொது தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இடையே, பத்திற்கும் மேற்பட்ட சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, இந்த மாதத்தில் மட்டும் ஐந்து சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
இதே வேளை, நாளை, மற்றும் எதிர்வரும் 6ஆம் 15ஆம் 17ஆம் திகதிகளில் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment