Sunday, December 11, 2011

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை!

Sunday, December 11, 2011
இலங்கை::யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சிறைச்சாலைக்கான நினைவு படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்த சிறைச்சாலை 533 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையின் நிர்மாணப்பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் மூன்று வருடங்களில் இந்த வேலைத்திட்டம் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்வின் போது யாழ் மாவட்ட நீதிபதி எஸ் பிரேமசங்கர், யாழ் நீதவான் ஆ.ஆனந்தராஜா, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி பரமராஜா உள்ளிட்ட மேலும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment