Sunday, December 11, 2011இலங்கை::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இந்த மாதம் 21ம் திகதி பெரும்பாலும் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் தினேஸ்குணவர்ன, எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி சம்பாஷனையின் போது இந்த தகவலைத் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வருட நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 21ம் திகதியுடன் நிறைவடைகின்றன.
இந்த நிலையில், இந்த வருடத்தின் நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடைவதற்கு முன்னர், குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment