Sunday, December 11, 2011ராமேஸ்வரம்::இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்நடத்தினர். 12 நாள் போராட்டத்திற்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்ட இலங்கை கடற்படையினர், சோடா பாட்டீல்கள், பீர்பாட்டில்கள் கற்களை கொண்டு தாக்கியதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் படகுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக மீனவர்கள் கூறினர். மேலும் தங்களை கைது செய்து சிறையில் அடைத்துவிடுவதாக இலங்கை கடற்படையினர் மரட்டல் விடுத்ததாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்..
ஒன்பது நாள் ஸ்டிரைக்கிற்கு பின் கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி கடந்த ஒன்பது நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து, எச்சரித்து விரட்டியுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்றதால் நேற்று கரை திரும்பிய படகுகளில் தலா 30 முதல் 60 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்தது. எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவே இறால் மீன்பாடு இருந்தது என, மீனவர்கள் தெரிவித்தனர். சிலர் வழக்கம்போல் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளால் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துள்ளனர். இதனைப்பார்த்த இலங்கை கடற்படையினர் இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்ட படகை வழிமறித்து படகில் இருந்த மீனவர்களை பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி விரட்டியடித்தனர்
No comments:
Post a Comment