Sunday, December 11, 2011இலங்கை::தமிழர்களுக்கு உள்ள அரசியல் ரீதியான பிரச்சினைகளை தாம் புரிந்துக் கொள்வதாக, ஜே வி பியின் மாற்றுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர், சாமிர கொஸ்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த பேச்சுக்களை, தென்னிலங்கை மக்கள், அரசியல் ரீதியாக நோக்காமல், அதனை ஒரு பிரிவினைவாதமாகவே நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
எனினும் தமிழர்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழர்களின் பிரச்சினைகளை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்.
எனினும், தனித்து நின்று தேசிய வாதம் பேசுவதை தாம் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment