Thursday,December, 08, 2011இலங்கை: இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமான முறையில் வெண் சந்தனம் விற்பனை செய்ய முற்பட்ட நால்வர், சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆடை ஏற்றுமதி மேற்கொள்ளும் பேரவையில், 276 கிலோகிராம் வெண் சந்தனம் கொள்கலனில் அடைத்து கப்பலில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் சாகர மஹாநாம குறிப்பிட்டார்.
கப்பலில் ஏற்றப்பட்டிருந்த வெண் சந்தன தொகையுடனான கொள்கலன், கடந்த 29 ஆம் திகதி சுங்கப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 27 இலட்சம் ரூபா பெறுமதியான வெண் சந்தனத் தொகை, ஆடை கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரதி சுங்கப் பணிப்பாளர் கூறினார்.
மருதானை பிரதேச வர்த்தகர் ஒருவரால் இந்த ஆடைக்கொள்கலன் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment