Wednesday, December 7, 2011

புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது!

Wednesday,December,07,2011
இலங்கை:புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றியீட்டிய இரண்டு உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளுடன் பேணிய தொடர்புகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களை மறைத்து வைப்பதற்கும் பயங்கரவாதிகளின் ஏனைய நடவடிக்கைகளும் குறித்த நபர்கள் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி மன்றமொன்றைச் சேர்ந்த ஒருவரும், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி மன்றமொன்றைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment