Monday, December 05, 2011இந்திய - இலங்கை நாடுகளைச் சேர்ந்த மூன்று பேருக்கு சவுதி அரேபியா, ஜித்தா நீதிமன்றில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேறு எட்டு பேருக்கு கசையடிகளுடன், 5 வருடசிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஜித்தா நகரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணி விற்பனை முகவர் ஒருவரை கொலை செய்த மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு கொண்டமை தொடர்பிலேயே இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜித்தா நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் நேற்று இந்த தண்டனைகள் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வாறு தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டவர்களுள் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் உள்ளடங்க கின்றமை குறிப்பிடத்தக்கது.
கொலைச் சம்பவம் தொடர்பான செய்தி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒகாஸ் சவுதி கெசட் என்ற நாளிதழில் வெளியாகியிருந்தது.
கொலையுடன் தொடர்புடைய 11 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என கொலையுண்டவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.
இருந்தபோதும், கொலையுடன் நேரடி தொடர்புடைய 3 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பும், ஏனையோருக்கு தலா ஆயிரம் கசையடிகளும், 5 வருட சிறைத்தண்டனையும்; வழங்கப்பட்டுள்ளன.
கயான், இஷ்க், பர்ஷான் ஆகியோருக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவருக்கு 400 கசையடிகளும், 4 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment