Monday, December 5, 2011

குவைட்டில் பாதிக்கப்பட்ட பல இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்!

Monday, December 05, 2011
குவைட்டில் உள்ள இலங்கை தூதுவர் காரியாலயத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 200 பேருக்கு மீண்டும் இலங்கை வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அவர்களில் 100 பேரைக் கொண்ட குழு நேற்று குவைட்டில் இருந்து விசேட வானூர்தியில் நாடுதிரும்ப ஏற்பாவுள்ளதாக வெளிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இலங்கையை வந்தடையும் இவர்கள் விசாரணையின் பின்னர் இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

எஞ்சிய 100 பேர் எதிர்வரும் வாரத்தில் இலங்கை அழைத்துவரப்படவுள்ளனர்.

குவைட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 500 யிற்கும் அதிகமானோர் ஏற்கனவே நாட்டுக்கு அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment