Sunday, December 11, 2011சென்னை: ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி, ஜனவரி 8ம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. வயது 18 முதல் 42க்குள் இருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 160 செமீ. எடை 50 கிலோ. மார்பளவு குறைந்தது 76 செமீ; 5 செமீ விரிவடைய வேண்டும். 10ம் வகுப்பு தேர்வில் 45 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் கல்வித் தகுதி உடையோருக்கு மதிப்பெண் விதிவிலக்கு அளிக்கப்படும்.
சலவை தொழில் தெரிந்தவர், காலணி சரி செய்பவர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; இவர்கள் செய்யும் தொழிலில் முன் அனுபவம் வேண்டும். துப்புரவு தொழில் தெரிந்தவர் 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். முன் அனுபவம் வேண்டும்.
அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி), சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 10 பாஸ்போர்ட் சைஸ் கலர் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
அடிப்படை மாத சம்பளம் ஸீ 5,700; இது தவிர அகவிலைப்படி& ஊதிய உயர்வு உண்டு. இலவச உணவு, தங்கும் இடம், உடை, மருத்துவ வசதி ஆகியவை ராணுவத்துக்கு இணையாக வழங்கப்படும். ஆண்டுக்கு 2 மாதம் பயிற்சி அளிக்கப்படும். மீதி 10 மாதங்கள் அவர்களது சொந்த தொழிலை பார்க்கலாம். தேவைப்படும் போது ராணுவப் பணிக்கு அழைக்கப்படுவார்கள். திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆஜராக வேண்டும்.
No comments:
Post a Comment