ஞாபகத்திற்கு வரும் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதை!யாழில் 1989 இல் 11ஆக இருந்த பாராளுமன்ற ஆசனம் 2011 இல் 05 ஆக மாறிய அவலம்!வாக்காளர் மீள் பதிவு செய்தால் 02 ஆசனம் மீளக் கிடைக்கும்!
Sunday, December 11, 2011இலங்கை::யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 1989 தேர்தலின் போது பதினொரு பாராளுமன்ற ஆசனங்கள் இருந்தன. 1994 தேர்தலின் போது அந்த எண்ணிக்கை 10 ஆகவும் 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போது 9 ஆகவும் குறைக்கப்பட்டிருந்தது.
யாழ். மாவட்டத்தின் சனத்தொகையின் அடிப்படையில் இனிவரும் தேர்தலின் போது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது. யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் இந்த 4 ஆசனங்களும் இரத்தினபுரி, குருநாகல், பதுளை மாத்தறை மாவட்டங்களுக்கு தலா ஒன்று வீதம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தி லிருந்து தெரிவு செயய்யப்படும் நாடாளு மன்ற ஆசனங்களின் 9லிருந்து 5ஆக குறைக்கப்பட்டுள்ளமை யானது, யாழ். மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என தேர்தல் திணைக்கள அதி காரிகள் உத்தியோகவூபூவமாக அறிவித்தி ருந்தனர்.
நிலைமை இவ்வாறு இருந்த போது, கடந்த வருடத்தில் வாக்காளர் பதிவின் போது விடுபட்டுப் போன 24.364 பேர் வடக்கில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தேர்தல் திணைக்களங்கள் கடந்தவாரம் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தேர் தல் திணைக்களங்களின் தகவலின்படி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 25,027 பேரும், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 7,337 பேரும் வாக்காளர் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பவ்ரல் அமைப்பு வழங்கிய படிவங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களே அதிகமாக இருந்தன என்று உதவித் தேர்தல்கள் ஆணை யாளர் பொ. குகநாதன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
விடுபட்டுப் போன வாக்காளர்களை மீளப்பதியும் பட்சத்தில், இழந்து போகும் அபாயத்திலிருந்து 2 ஆசனங்களை மீளப் பெறும் சாத்தியம் உருவாகியுள்ளதற்கு பவ்ரல் போன்ற அரச சார்பற்ற அமைப்பு களே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment