Saturday, December 3, 2011

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் மூவரையும் இந்திய மீனவர்கள் ஐவருக்கும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Saturday, December 03, 2011
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் மூவரையும் இந்திய மீனவர்கள் ஐவரையும் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் எஸ்.கஜநிதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் நெடுந்தீவு கடற்பரப்பிலிருந்து இவர்களைக் சோதனை செய்யும் போது, எட்டுப்பேரிடமிருந்து ஒருகோடியே 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்படையினரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இன்று சனிக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment