Saturday, December 3, 2011

ராஜீவ் கொலை கைதிகள் நளினி-முருகன் இன்று காலை வேலூர் மத்திய சிறையில் சந்திப்பு!

Saturday, December 03, 2011
ராஜீவ் கொலை கைதிகள் நளினி-முருகன் இன்று காலை வேலூர் மத்திய சிறையில் சந்திப்பு!


வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரு வாரங்களுக்கு ஒருமுறை வேலூர் பெண்கள் சிறையில் சந்தித்து பேசுவது வழக்கம். அதன்படி இன்று காலை நளினியும், முருகனும் சந்தித்து பேசினர். காலை 7.15 மணிக்கு ஆண்கள் சிறையில் இருந்து பெண்கள் சிறைக்கு முருகனை போலீசார் அழைத்துச் சென்றனர். 7.45 மணி வரை இருவரும் பேசினர். அதன்பிறகு முருகனை ஆண்கள் சிறைக்கு கொண்டு சென்றனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment