Saturday, December 24, 2011ஆவடி : கேரள அரசை கண்டித்து அம்பத்தூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், பாமக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி சார்பில் அம்பத்தூரில் இன்று காலை 11 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, பாமக மாவட்ட செயலாளர் கே.என்.சேகர், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். அம்பத்தூர் முருகன் கோயிலில் இருந்து சுமார் 500 பேர், கருப்புக்கொடியுடன் புறப்பட்டனர். ‘‘இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும். கேரளாவுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்ÕÕ என்று கோஷம் போட்டனர். இதையடுத்து, அம்பத்தூர் ரயில் நிலையத்துக்குள் புகுந்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தில் நின்று திடீரென மற¤யலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையை நோக்கி செல்ல இருந்த மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தகவல் கிடைத்ததும், அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் வந்தனர். மறியலில் ஈடுபட்ட பாமக நகர செயலாளர் மு.சந்தானம், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் விசுவநாதன், அமைப்பாளர் பி.எஸ்.குமார், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மாரியப்பன், திராவிடர் கழக நகர தலைவர் ஏழுமலை உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று, அம்பத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
No comments:
Post a Comment